சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ministers
Published on: 

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெசிடி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த சௌகார் ஜானகி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி

இதற்கிடையே, சௌகார் ஜானகி உடலுக்கு காலை முதலே சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, ஷாலினி அஜித், நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள், சிவகுமார், குட்டிபத்மினி, சத்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சபாநாயகர் நேரில் அஞ்சலி

இந்நிலையில், மறைந்த நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com