Titanic

டைட்டானிக்- திரை விமர்சனம்

டைட்டானிக் 3 காதல் ஒரே பயணம்.
Published on: 
டைட்டானிக்- விமர்சனம்(2.5 / 5)

கதை

சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரெயிலில் பயணம் செய்கின்றனர் கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய் ஆகிய மூவரும். பயணத்தின்போது ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் இவர்கள், தங்களது காதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மூவரின் காதல் கதைகளும், எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் வந்து சந்திக்கின்றன.

அந்த 3 காதல்களின் பின்னணி என்ன? அவற்றுக்குள் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இயக்கம்

3 வெவ்வேறு காதல் அனுபவங்களை சுவாரசியமாகச் சொல்லி, அவற்றை ஒரே கதைக்களத்தில் இணைத்திருக்கும் இயக்குநர் ஜானகிராமனின் முயற்சி ரசிக்க வைக்கிறது.

நடிகர்கள்

வழக்கமான தனது எதார்த்தமான நடிப்பால் கலையரசன் கவனத்தை ஈர்க்கிறார். காதல் அனுபவங்களை நகைச்சுவை கலந்து வெளிப்படுத்தும் காட்சிகளில் காளி வெங்கட் தனது தனித்துவமான நடிப்பால் சிரிக்க வைக்கிறார்.

திருமணத்தின்போது முன்னாள் காதலி வந்து நிற்பதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் காட்சிகளில் ராகவ் விஜயின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.

இசை

நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். காதல் கதைகளுக்குள் இடம்பெறும் சுவாரசியமான சம்பவங்களை இன்னும் கொஞ்சம் வலுவாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருந்தால் படம் கூடுதலாக ரசிக்க வைத்திருக்கும்.

ஒளிப்பதிவு

பாலுவின் ஒளிப்பதிவு ெரயில் பயணக் காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தி ரசிக்க வைக்கிறது.

டைட்டானிக் 3 காதல் ஒரே பயணம்.

X