படத்துல இந்த பாட்டு வராது - ப்ளடி பெக்கர் படத்தின் 2nd சிங்கிள் இன்று மாலை முதல்

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
படத்துல இந்த பாட்டு வராது - ப்ளடி பெக்கர் படத்தின் 2nd சிங்கிள் இன்று மாலை முதல்
Published on

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீலம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும்.

படத்தின் ப்ரோமோ பாடலான பெக்கர் வாலா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதுக்குறித்து வெளியிட்ட போஸ்டரில் படத்துல இந்த பாட்டு வராது! இப்பவே சொல்லிட்டோம் ! என நகைச்சுவை பாணியாக அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com