‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!

படம் நவ.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
Published on: 

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள சத்தியவான் சாவித்திரி படத்தின் மூன்றாவது பாடலான ‘கூடிங்கே’ வெளியாகி உள்ளது.

உமாதேவி குப்பன் வரிகளுக்கு, சைந்தவி குரல் கொடுத்துள்ளார்.

பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் படத்தை தயாரித்துள்ளது. படம் நவ.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X