`கூட்டத்துல ஒருத்தனா இருக்க கூடாது' - ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து வீடியோ

'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
`கூட்டத்துல ஒருத்தனா இருக்க கூடாது' - ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து வீடியோ
Published on

'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

மேலும் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

படத்தின் பாடல்கள் இரண்டு மாதங்களுக்கும் முன் வெளியாகிய நிலையில். இன்று ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com