தங்கலான் படத்தின் `மினிக்கி மினிக்கி' வீடியோ பாடல் வெளியானது

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சமீபத்தில் விக்ரம் தெரிவித்து இருந்தார்.
தங்கலான் படத்தின் `மினிக்கி மினிக்கி'  வீடியோ பாடல் வெளியானது
Published on

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சமீபத்தில் விக்ரம் தெரிவித்து இருந்தார். படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.

படத்தின் இடம் பெற்றுள்ள `மினிக்கி மினிக்கி' பாடலின் வீடியோ பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். பாடல் வெளியானதில் இருந்து மிகவும் வைரலாகியும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இப்பாடல்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com