சுசீந்திரனின் 2K Love Story படத்தின் `எதுவரை உலகமோ' பாடல் வெளியானது

சுசீந்திரன் ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.திரைப்படம் காதல் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுசீந்திரனின் 2K Love Story படத்தின் `எதுவரை உலகமோ' பாடல் வெளியானது
Published on

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் காதல் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் 4-வது பாடலான எதுவரை உலகமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com