கவனத்தைப் பெற்ற 'தி ஸ்மைல் மேன்' டீசர்

இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கவனத்தைப் பெற்ற 'தி ஸ்மைல் மேன்' டீசர்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அவரது 150-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'தி ஸ்மைல் மேன்' என் பெயரிடப்பட்டுள்ளது.

மெமரீஸ் படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் இப்படத்தை இயக்குகிறார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது. ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும், சான் லோகேஷ் படத்தொகுப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரியான சரத்குமார் மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை காட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com