'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிருஷ் திருக்குமரன் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
Published on

2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிருஷ் திருக்குமரன் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

இந்த படத்திற்கு 'ரெட்ட தல' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் அருண் விஜய்-க்கு 36 வது படமாகும்.

மான் கராத்தே திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு எப்படி ஒரு மாறுபட்ட படமாக அமைந்ததோ ரெட்ட தல திரைப்படம் அருண் விஜய்-க்கு முக்கிய திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com