நண்பரின் மறைவு வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது..!- ரஜினிகாந்த் இரங்கல்

பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Rajinikanth
Published on

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தி அறிந்ததும் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் இங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com