தி பாரடைஸ்- விமர்சனம்(2.5 / 5)
கதை
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமையாகவும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக இருக்கிறார் மோகன் பாபு. அவரது அடக்குமுறைக்கு எதிராக போராடும் சோனாலி குல்கர்னிக்கு பிறக்கும் மகன்தான் நானி.
சிறுவயதிலேயே மோகன்பாபுவால் சிறைக்கு அனுப்பப்படும் நானி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்து தனது மக்களுக்காக ஆயுதம் ஏந்தி தன் இனத்துக்கு அங்கீகாரம் பெற்றுத் தரப் போராடுகிறார்.
அவரது போராட்டம் வென்றதா? இல்லையா?என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நானி இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். வழக்கமான பக்கத்து வீட்டு இளைஞன் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பு. சோனாலி குல்கர்னி தாயாக சிறப்பாக நடித்துள்ளார்.
உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு படத்துக்கு வலுசேர்க்கிறது. கீர்த்தி சுரேசின் சிறப்பு நடனம் திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.
மோகன் பாபு மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். கயாடு லோஹர், ராகவ் ஜுயால் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, ‘தசரா’ படத்தில் காட்டிய தனது திறமையை இங்கும் சில காட்சிகளில் வெளிப்படுத்துகிறார். பிரமாண்டமான காட்சியமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை படத்தின் பலம்.
வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவை சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், நீளமான திரைக்கதை படத்தின் பலவீனமாக மாறுகிறது.
மொத்தத்தில் அடிமைத்தனத்தோடு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும் போராட்ட களம் தி பாரடைஸ்.
ஒளிப்பதிவு
சாய் கேமரா படத்தின் பிரமாண்டத்தை அதிகப்படுத்துகிறது.
இசை
அனிருத்தின் பின்னணி இசை படத்தின் பிரமாண்டத்தை உயர்த்தி பிடிக்கிறது.

