கங்குவா படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர்

இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
கங்குவா படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர்
Published on

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் இரு வேடங்களில் காணப்படுகிறார். ஒரு கதாப்பாத்திரம் கையில் கத்தியுடன் ஒரு பழங்கால வீரரைப் போல் காட்சியளிக்கிறார். அவருக்கு எதிரி மற்றொரு கதாப்பாத்திரம் இக்கால மனிதனைப் போல் கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

எப்படிப்பட்ட கதைக்களத்துடன் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. படம் இந்தாண்டு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது கங்குவா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com