

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா படம் பெத்தி. இப்படத்தில் ராம் சரணுடன், ஜான்வி கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன்.4ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹல்லல்லோ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் நடனம் ஆடியுள்ளார்.