ஜெய் நடித்துள்ள பேபி & பேபி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் ஜெய் அடுத்து நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
ஜெய் நடித்துள்ள பேபி & பேபி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
Published on

கடந்த ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் தீரா காதல் மற்றும் பார்ட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன . நடிகர் ஜெய் அடுத்து நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாஇ தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் ஒரு குழந்தையை சுற்றியே நடக்கிறது. டீசரில் அனைவரும் ஒரே கேள்வியைதான் கேட்கிறார்கள். யாரோட குழந்தை டா இது ? என்று. டீசர் திரைப்படத்தின் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ஆரா அமுதே பாடலில் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் சைந்தவி பாடியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com