வெளியானது 'விடாமுயற்சி' பர்ஸ்ட் சிங்கிள்

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது.
வெளியானது 'விடாமுயற்சி' பர்ஸ்ட் சிங்கிள்
Published on

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியானது. லிரிக் வீடியோ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com