சூது கவ்வும் 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானதுஇந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது
சூது கவ்வும் 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Published on

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள அந்த போஸ்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com