'டிமான்ட்டி காலனி 2' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'டிமான்ட்டி காலனி 2' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
Published on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகி 15 ஆம் தேதி வெளியாகியது.

இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அருள்நிதி நடித்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்று வருகிறது. இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிரியா பவானி ஷங்கர் மீது நெட்டிசன்களால் சுமத்தப்பட்ட ராசி இல்லாத நபர் என்ற பழிச்சொற்கள் எல்லாம் இப்படத்தின் மூலம் மறைந்து வருகிறது.

இந்த வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com