படத்தின் நேர அளவை குறைத்த இந்தியன் 2 படக்குழு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது 'இந்தியன்'இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் நேர அளவை குறைத்த இந்தியன் 2 படக்குழு
Published on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று முதல் நீட்கப்பட்ட வெர்ஷன் அனைத்து திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக 3 மணி நேரம் இருந்த நீளம் இப்பொழுது குறைக்கப்பட்டு படத்தின் அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com