ரத்தம் தெறிக்க .. தெறிக்க உருவாகியுள்ள சொர்கவாசல் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை குழு

ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரத்தம் தெறிக்க .. தெறிக்க உருவாகியுள்ள சொர்கவாசல் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை குழு
Published on

ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர் ஜே பாலாஜிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக இயக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்நிலையில் மிகுந்த ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளதால் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com