வல்லமை படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியது

விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.வல்லமை படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார்.
வல்லமை படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியது
Published on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டீசர் இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் தளத்தில் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்தார். இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com