The Andhagan Anthem... தீம் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்

அந்தகன் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.
The Andhagan Anthem... தீம் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இந்தப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, அந்தகன் படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com