ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தங்கலான்

தங்கலான் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் தங்கலான் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்படும் தங்கலான்
Published on

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திரைப்படம் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் தங்கலான் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதில் தங்கலான் திரைப்படத்தின் டைரக்டர்ஸ் கட் வெர்ஷனை திரையிடவுள்ளனர். இதனை மிகவும் பெருமையுடன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com