எகிறும் எதிர்பார்ப்பு.. தளபதி 69-இல் இணைந்த பிரகாஷ் ராஜ்

தளபதி 69 படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார்.தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
எகிறும் எதிர்பார்ப்பு.. தளபதி 69-இல் இணைந்த பிரகாஷ் ராஜ்
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார். தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு நேற்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த வரிசையில், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி ஆகியோர் தளபதி 69 படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. இவர்கள் தவிர, நடிகர் நரைன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் தளபதி 69 படத்தில் நடிக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com