தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Published on

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள இப்படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது . 

X

Maalai Malar
www.maalaimalar.com