சூர்யா 45 திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்கள்

சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார்.
சூர்யா 45 திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்கள்
Published on

சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யாவின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்ளவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் நடைப்பெற்று வருகிறது.

படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு மற்றும் ஷிவாதா நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.

இதை தொடர்ந்து படத்தில் தெலுங்கு நடிகரான சுப்ரீத் ரெட்டி மற்றும் மலையாள நடிகையான அனகா மாயா ரவி இணைந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

சுப்ரீத் ரெட்டி பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தின் நடித்து இருந்தார்.

மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான காதல் தி கோர் திரைப்படத்தில் மம்மூட்டிக்கு மகளாக நடித்தவர் அனகா மாயா ரவி.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com