திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பதா?- நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்

ஒரு பெண்ணை பற்றி இப்படி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. யூகங்கள் அடிப்படையில் ஒரு நடிகையை விமர்சிப்பது பெரும் தவறு.
திரிஷா- சஞ்சனா கல்ராணி
திரிஷா- சஞ்சனா கல்ராணி
Published on

திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு என்று பாலிவுட் நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் ஆவார். சமீபகாலமாகவே அவர் மீதான விமர்சனங்கள் பெரியளவில் அதிகரித்துள்ளன. ஆனாலும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் மனதுக்கு பட்டதை செய்து வருகிறார், திரிஷா.

பெரும் தவறு

இதற்கிடையில் திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு என்று பாலிவுட் நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ''சமீபகாலமாகவே திரிஷாவை குறிவைத்து பலரும் விமர்சிக்கிறார்கள். ஒரு பெண்ணை பற்றி இப்படி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. யூகங்கள் அடிப்படையில் ஒரு நடிகையை விமர்சிப்பது பெரும் தவறு.

திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு. தனக்கு பிடித்ததை பேச, செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் திரிஷாவும் விதிவிலக்கல்ல. எனவே ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக அவரை மதியுங்கள். வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்'', என்று குறிப்பிட்டார்.

சஞ்சனா கல்ராணி நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com