பிரபு தேவாவின் 'வுல்ஃப்' புதிய அப்டேட்

நடிகர் பிரபு தேவா ’வுல்ஃப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை வினு வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
பிரபு தேவாவின் 'வுல்ஃப்' புதிய அப்டேட்
Published on: 

எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது 'வுல்ஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வுல்ஃப்

சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com