திரைப்பிரபலங்கள் வெளியிட்ட சதீஷ் படத்தின் முதல் பாடல்

வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
திரைப்பிரபலங்கள் வெளியிட்ட சதீஷ் படத்தின் முதல் பாடல்
Published on

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். வி.பி.ஆர். இசையமைக்கும் இப்படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான "லைஃப் இஸ் மேஜிக்" பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.  கேட்டவுடன் பிடிக்கும் வகையில், அனைவரும் முணுமுணுக்கும் அட்டகாச மெலடியாக அமைந்துள்ள இப்பாடல், ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com