மிகுந்த எதிர்பார்ப்பில் பாலிவுட் ரசிகர்கள்- 'விக்ரம் வேதா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுது.
விக்ரம் வேதா
விக்ரம் வேதா
Published on

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா படக்குழு
விக்ரம் வேதா படக்குழு

விக்ரம் வேதா படக்குழு

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

விக்ரம் வேதா
விக்ரம் வேதா

விக்ரம் வேதா

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரம் வேதா இந்தி படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com