ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
ரஜினி - விக்ரம் 
ரஜினி - விக்ரம் 
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் 
விக்ரம் 

விக்ரம் 

இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com