இவருடன் பணிபுரிந்தது என்ன ஒரு அனுபவம்.. விஜய் பட இயக்குனர் நெகிழ்ச்சி

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்.
மோகன் ராஜா
மோகன் ராஜா
Published on

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மோகன் ராஜா - சிரஞ்சீவி
மோகன் ராஜா - சிரஞ்சீவி

மோகன் ராஜா - சிரஞ்சீவி

கடந்த வருடம் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்திற்கு 'காட்ஃபாதர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா
பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா

பிரபுதேவா - மோகன் ராஜா, பிரபுதேவா

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'காட்ஃபாதர்' படத்தின் பாடல் ஒன்று நிறைவுபெற்றுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு பிரபுதேவாவுடன் பணிபுரிந்தது என்ன ஒரு அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com