வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டது.
வலிமை
வலிமை
Published on

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வலிமை

'வலிமை' படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கொரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com