

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திருசிற்றம்பலம் படத்தின் "தேன்மொழி" பாடல் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடலை "திருசிற்றம்பலம்" இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து பாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.