தனுஷ் படத்தின் அப்டேட்டால் குழம்பி போன ரசிகர்கள். கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷ்
தனுஷ்
Published on

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திருசிற்றம்பலம்

இந்நிலையில் படக்குழு "உங்கள் ஆடர் தயாராகுகிறது, விரைவில் டெலிவரி செய்யப்படும்" என்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது எதற்கான அப்டேட் என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com