ரூஸோ சகோதரர்களுடன் பாரம்பரிய உடையில் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்..

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்'.இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.
தி கிரே மேன்
தி கிரே மேன்
Published on

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

தி கிரே மேன்

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது.

தி கிரே மேன்' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார்.

தனுஷ் - ரூஸோ சகோதரர்கள்

இந்நிலையில், 'தி கிரே மேன்' படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com