அமிதாப்பிற்கு சொல்லி கொடுக்கும் ரஜினி- தலைவர் 170 அப்டேட்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
அமிதாப்பிற்கு சொல்லி கொடுக்கும் ரஜினி- தலைவர் 170 அப்டேட்
Published on

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com