கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி

1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா.நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது.
டாப்சி
டாப்சி
Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார்.

சில்க் சுமிதா
சில்க் சுமிதா

சில்க் சுமிதா

சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011-ல் மிலன் இயக்கத்தில் இந்தியில் 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

சில்க் சுமிதா - டாப்சி
சில்க் சுமிதா - டாப்சி

சில்க் சுமிதா - டாப்சி

முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவதால் வித்யாபாலன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

டாப்சி
டாப்சி

டாப்சி

எனவே சில்க் சுமிதா வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை அணுகியுள்ளனர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால் டாப்சி, கீர்த்தி சனோன் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும், டாப்சி நடிக்க அதிகபடியான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com