விரைவில் வெளியாகும் சூர்யா 42 பட டைட்டில்.. பிரபல தயாரிப்பாளர் பதிவு..

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது 42-வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா 42
சூர்யா 42
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

தனஞ்ஜெயன்

இதையடுத்து இப்படத்தில் 'சீதா ராமம்' படத்தில் நடித்த மிருணாள் தாகூர் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு 'வீர்' என படக்குழு தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் 'சூர்யா 42' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com