சூர்யா பட நடிகையின் சாகசம்.. வைரலாகும் வீடியோ..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42-வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பத்தானி இணைந்துள்ளார்.
திஷா பத்தானி
திஷா பத்தானி
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

திஷா பத்தானி

இதையடுத்து இப்படத்தின் கதாநாயகி திஷா பத்தானிக்கு இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திஷா பத்தானி தனது சமூக வலைதளத்தில் பறந்து பறந்து அடிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com