வாரணம் ஆயிரம் படம் போன்று கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.சூர்யா ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாரணம் ஆயிரம் படம் போன்று கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா
கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா

கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா

இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாரணம் ஆயிரம் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட சூர்யா தற்போது அதேபோன்று ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி இருக்கும் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com