புனித் ராஜ்குமாருக்கு குரல் கொடுத்த சகோதரர்

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் படத்திற்கு அவருக்காக குரல் கொடுத்த அவரின் சகோதரர்.
புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்
Published on

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்களை உலுக்கியது. இவர் கடைசியாக இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் தான் அவர் திடிரென உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகும் இப்படத்தின் பணிகளை முடித்து வெளியிட படக்குழு முடிவுசெய்தது. அதன்படி சமீபத்தில் அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஜெம்ஸ் படத்தின் போஸ்டர்

தற்போது ஜேம்ஸ் படத்தின் டப்பிங் பணியில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் 'ஜேம்ஸ்' படத்தில் நடித்து மறைந்த புனித் ராஜ்குமாரின் கதாபாத்திரத்திற்கு அவரது சகோதரர் சிவராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் தம்பி படத்தில் அவருக்காக நான் டப்பிங் பேசியுள்ளது மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார். 

சிவராஜ்குமார்

இப்படத்தின் பணிகள் முடிந்து விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com