சிறப்பு வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படக்குழு

நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிறப்பு வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படக்குழு
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com