சித்தார்த் - அதிதி ராவ் காதல் உறுதி?

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சித்தார்த்.மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதிராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
சித்தார்த் - அதிதிராவ்
சித்தார்த் - அதிதிராவ்
Published on

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தார்த் - அதிதிராவ்
சித்தார்த் - அதிதிராவ்

சித்தார்த் - அதிதிராவ்

சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள்இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர்.

அதிதிராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com