ஸ்ரேயாவின் மியூசிக் ஸ்கூல் பட டிரைலர் வெளியீடு

ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’.இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா
மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா
Published on

இயக்குனர் பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா
மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா

மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மியூசிக் ஸ்கூல் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com