செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதையடுத்து நடிகர் கமல்ஹாசனை, செம்பி படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.
கோவை சரளா - கமல்
கோவை சரளா - கமல்
Published on

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விக்ரம்'. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெளியான 10 நாட்களிலே ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து 'விக்ரம்' படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து செம்பி படக்குழுவினர் 'விக்ரம்' படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர்.

செம்பி படக்குழு
செம்பி படக்குழு

செம்பி படக்குழு

இந்த சந்திப்பின் போது செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரைடெண்ட் ரவீந்திரன், ஏ.ஆர்.எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குனர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், செம்பி படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவினரை பாராட்டிய கமல்ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து படக்குழுவினர் செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com