சர்வதேச அங்கீகாரத்தை கைப்பற்றிய 'சார்பட்டா பரம்பரை'.. பா.இரஞ்சித் பதிவு

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை
Published on

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

சார்பட்டா பரம்பரை

1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

சார்பட்டா பரம்பரை போஸ்டர்

இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதாவது, இப்படம் 2023-ஆம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com