அஜித்துக்கு வில்லனாகும் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகர்

வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அஜித்துக்கு வில்லனாக ‘சார்பட்டா பரம்பரை’ நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், ஜான் கொக்கன், ஏகே61,
அஜித், ஜான் கொக்கன், ஏகே61,
Published on

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

ஜான் கொக்கன்

கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

ஜான் கொக்கன்

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக ‘சார்பட்டா பரம்பரை' படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com