இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசனை- வைரலாகும் சலார் பாடல்

பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.இப்படம் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசனை- வைரலாகும் சலார் பாடல்
Published on

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 'சலார்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'சூரியன் குடையா நீட்டி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவரின் முழுபலமாகவும் அதே நேரம் பலவீனமாகவும் இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுவது போன்று இந்த பாடல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com