ராம் சரண் பிறந்தநாளுக்கு ஷங்கர் கொடுத்த சிறப்பு பரிசு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் திரைப்படம் ஆர்.சி.15.இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராம் சரண் - ஷங்கர்
ராம் சரண் - ஷங்கர்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரன் நடிப்பில் ஆர்.சி.15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்சி15 படத்தின் தலைப்பு
ஆர்சி15 படத்தின் தலைப்பு

ஆர்சி15 படத்தின் தலைப்பு

இந்நிலையில் ஆர்சி15 படத்தின் டைட்டில் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு கேம் சேஞ்ஜர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com