இது ஆக்ஷனுக்கான நேரம்- புதிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி படக்குழு

ரஜினியின் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இது ஆக்ஷனுக்கான நேரம்- புதிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி படக்குழு
Published on

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தலைவர் 170 போஸ்டர்

இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com